தமிழகத்தில் வருகின்ற ஜூலை 28ஆம் தேதி முதல் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. சென்னை மாமல்லபுரத்தில் முதல்முறையாக சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்க உள்ளது. இதனைத் தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் தொடக்க நாளான ஜூலை 28ஆம் தேதி அன்று சென்னை, திருவள்ளூர்,செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி அன்று சனிக்கிழமை இந்த நான்கு மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories