திமுக அரசை கண்டித்து அதிமுக நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுகவின் கொறாடாவும், தலைமை நிலை செயலாளருமான எஸ்பி வேலுமணி, கோவை மாவட்டத்தில் 50 வருடத்தில் இல்லாத வளர்ச்சியை 5 வருடத்தில் சாத்தியப்படுத்தி இருக்கின்றோம். திமுகவுக்கும், அதிமுகவுக்கும் ஒரு புள்ளி ஐந்து சதவீதம் தான் வாக்கு வித்தியாசம் எங்கள் மீது வழக்கு போடுகிறார்கள். இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய காலம் வரும். காவல்துறை மு.க ஸ்டாலினுக்கு அடிமை கிடையாது. மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறீர்கள் காலம் திருப்பி கொடுக்கும்.
ஓபிஎஸ் உடன் சேர்ந்து அதிமுகவின் கோவிலை ஸ்டாலின் உடைத்துள்ளார். எடப்பாடியை கண்டால் ஸ்டாலினுக்கும், திமுக விற்கும் பயம். பாஜக எங்களுடைய கட்சி உள்விவகாரத்தில் தலையிடாது என நாங்கள் யாரு பேச்சையும் கேட்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. தமிழ்நாட்டில் இருந்து குடியரசுத் தலைவர் பிரிவு உபச்சார விழாவிற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் தான் அழைக்கப்பட்டனர். ஸ்டாலினுக்கு ஏதாவது ஒரு விளம்பரம் தேடிக் கொண்டே இருக்க வேண்டும் என்று விமர்சித்தார்.