தனுசு ராசி அன்பர்களே, இன்று உங்களுடைய நல்ல செயல் நண்பரிடம் பாராட்டுகளை பெறக்கூடும், தொழிலில் அதிக உழைப்பினால் சாதனை புரிவீர்கள். உபரி பணவரவு இருக்கும். பெண்களின் மனதில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு சிறக்கும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் இன்று மாறும்.
குடும்பத்தில் நிம்மதி கூடும். உங்கள் கருத்துக்கு மதிப்பு அதிகரிக்கும். கணவன்-மனைவிக்கு இடையே இருந்து வந்த பிரச்சனைகள் மறைந்து, ஒற்றுமை ஓங்கும். பிள்ளைகளிடம் பாசம் அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். லாபம் இருக்கும். ஆனால் இன்று நீங்கள் வாகனத்தில் செல்லும் பொழுது ரொம்ப பொறுமையாக செல்ல வேண்டும்.
வீண் வாக்குவாதங்கள் தயவுசெய்து தவிர்க்க வேண்டும். சரியான நேரத்திற்கு தூங்கச் செல்ல வேண்டும். அது மட்டுமில்லாமல் கொடுக்கல்-வாங்கலில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். பணம் பரிவர்த்தனையின் கொஞ்சம் கவனமாகத்தான் இருக்க வேண்டும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கொஞ்சம் பொறுமையாக செயல்படுவது ரொம்ப சிறப்பு.
இன்று மாணவச் செல்வங்கள் கடுமையாக பாடங்களை படித்து முன்னேற வேண்டும். படித்த பாடத்தை எழுதி பார்க்க வேண்டும்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவிலேயே இருக்கும்.
அதுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு நிறம்