சுசீந்திரம் அருகே உள்ள அக்கறை குத்துக்கல் பகுதியில் ஆனந்தம்(87) என்பவர் வசித்து வருகின்றார். இந்த நிலையில் ஆனந்தம் வீட்டில் தனியாக இருந்துள்ள போது ஆபாச வார்த்தைகளால் தனக்குத்தானே பேசியதாக தெரிகின்றது. அதே சமயம் அந்த பகுதியை சேர்ந்த அசோக்நாத் என்ற தொழிலாளி என்பவர் நடந்து சென்றுள்ளார்.
இந்த நிலையில் தன்னைத்தான் அவர் திட்டுகிறார் என நினைத்த அசோக்நாத் வீடு புகுந்து ஆனந்தத்தை தாக்கி செங்களால் தலையில் அடித்ததாக கூறப்படுகின்றது. இதில் படுகாயம் அடைந்த ஆனந்தம் நாகர்கோவில் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இது பற்றி புகாரின் பெயரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாய் லட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் முத்துசாமி போன்ற அசோக்நாத் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.