உலகிலேயே முதன்முறையாக மிகப்பெரிய செஸ் போட்டியை தமிழகத்தில் நடத்துவதற்கான உரிமையை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதன்படி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்த நிகழ்ச்சிக்கு 92 கோடி ஒதுக்குவதாக தெரிவித்தார். கடந்த ஜூன் 19ஆம் தேதி அன்று ஒலிம்பிக் போட்டிக்கான முதல் ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். வரும் 28-ம் தேதி மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதில் 180 நாடுகளில் இருந்து சுமார் 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந் நிலையில் போட்டியை விளம்பரப்படுத்தும் வகையில் ஒலிம்பியாட் இலச்சியான தம்பி, நம்ம சென்னை. நம்ம செஸ் மற்றும் செஸ் போர்டு படங்கள் ஆவின் பால் பாக்கெட்டுகளில் விளம்பரம் செய்துள்ளது ஆவின் நிறுவனம்.