Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட கொடூரம்…… 16 வயது பெண்ணை கடத்தி…. 3 மாதங்களாக கூட்டு பாலியல் பலாத்காரம்…!!!!

ஜார்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தை சேர்ந்த  16 வயது பெண் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி மாயமாகிவிட்டார். இதனையடுத்து பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அந்த மாணவியை தேடும் பணியை நடத்தியுள்ளனர். அதன் பிறகு காவல்துறையினர் இதில் பெரிய ஆர்வம் காட்டாமல் மாணவி திரும்பி வருவார் அதுவரை காத்திருக்குமாறு பெற்றோரிடம் கூறியுள்ளனர். இந்நிலையில் திடீரென அந்த மாணவி வந்தார். அதன் பிறகு அந்த மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி கடைக்கு சென்று கொண்டிருந்த பெண்ணை ஆட்டோவில் வந்த மாதேஷ், விஷ்ணுகுமார், மற்றும் வினோத் குமார் ஆகியோர் வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றி ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஒரு பகுதியில் இருந்த வீட்டுக்குள் அடைத்து வைத்துள்ளனர்.

அதனப்பிறகு அவர்கள் மூன்று பேரும் மூன்று மாதங்களாக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தினர். அவர்கள் வெளியே செல்லும்போது வாய் மற்றும் கையே துணியால் கட்டிவிட்டு சென்று உள்ளனர். இதனையடுத்து ஜூலை 19ஆம் தேதி இதனை பார்த்த அப்பகுதி சேர்ந்த மற்றொரு பெண் வீட்டைத் திறந்து அந்த பெண்ணை காப்பாற்றி உள்ளனர். அதன் பிறகு பாதிக்கப்பட்ட பெண் அங்கிருந்து தப்பி பெற்றோரிடம் வந்துள்ளனர். உடனே அவர்கள் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை டிஎஸ்பி கூறியது, பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகிறோம். பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட பிறகு அவருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |