Categories
தேசிய செய்திகள்

2020 பட்ஜெட்டினால் தென்மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் – ஓர் அலசல்!

2020 தேசிய பட்ஜெட் பிப்ரவரி ஒன்றாம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டினால் தேன்மாநிலங்களுக்கு ஏற்படும் விளைவுகள் குறித்த ஒரு செய்தித் தொகுப்பை இந்த செய்தியில் காணலாம்.

நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது சமீபத்திய பட்ஜெட் உரையில், 15ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை கணிசமாக ஏற்க மத்திய முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். பரிந்துரைகளின் சுருக்கத்தின் முதல் குறிப்புகள் 2019 டிசம்பர் முதல் வாரத்தில் வெளிவந்தன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து தென் மாநிலங்கள் கொண்ட அச்சங்கள் உண்மையாகி விட்டன.

15ஆவது நிதி ஆணையத் தலைவர் என்.கே.சிங், முற்போக்கான மாநிலங்களை மேலும் முன்னேறச் செய்வதும், மந்தமான மாநிலங்கள் தேசிய சராசரி அளவை எட்ட உதவுவதும் அவர்களின் நோக்கம் என்று கூறினார். ஆனால் சமீபத்திய பட்ஜெட்டில் முன்வைக்கப்பட்ட திட்டங்கள் தென் மாநிலங்களை நஷ்டத்தில் ஆழ்த்தின. 15ஆவது நிதி ஆணையம் ஏற்றுக்கொண்ட புதிய வரி பகிர்வு அளவுகள் காரணமாக, 20 மாநிலங்களுக்கு நிதிகளில் அதிக பங்கு கிடைக்கும், மீதமுள்ள 8 மாநிலங்கட்கு நிதிகக் குறைப்பு இருக்கும். அந்த அதிர்ஷ்டமிக்க 20 மாநிலங்களின் வருவாய் வளர்ச்சி ரூ .33,000 கோடியாகவும் அதிர்ஷ்டமில்லாத 8 மாநிலங்களின் வருமான இழப்பு ரூ.18,389 கோடியாயிருக்கும்.

தமிழகம் அதிர்ஷ்ட 20 இல் ஒன்றாக உள்ளது, மீதமுள்ள தென் மாநிலங்கள் மொத்தம் ரூ .16,640 கோடி இழப்பைக் காண உள்ளன. ஒரு நிதியாண்டுக்கான மதிப்பிடப்பட்ட இழப்பு இத்துணை அதிகமாக இருந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஏற்படும் இழப்புகள் கற்பனை செய்ய முடியாதவை. மறுபுறம், என்.கே.சிங் தலைமையிலான 15ஆவது நிதி ஆணையம் 14ஆவது ஆணையம் பரிந்துரைத்த வருவாயின் மாநிலப் பங்கை 42விழுக்காட்டில் இருந்து 41 விழுக்காடாகக் குறைத்துள்ளது. இந்த ஒரு விழுக்காடு யூனியன் பிரதேச நிலையை இழந்து இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலங்களின் பாதுகாப்பை நோக்கிச் செலுத்தப்படும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. வளர்ச்சிக் குறியீட்டில் வருவாய் நெருக்கடி உள்ள மாநிலங்கள் பின்தங்கியிருந்தால் யாரைக் குற்றவாளி ஆக்குவது?

தனிப்பட்ட மாநிலங்கள் தன்னிறைவு பெற்று அதனால் அவர்கள் தங்கள் மாநிலங்களுக்கான சொந்த நலத்திட்டங்களை வகுத்து செயல்படுத்துவே தனது திட்டநிரலாக இருக்கும் என்று 2015 பிப்ரவரியில் பிரதமர் மோடி அறிவித்தார். 14ஆவது நிதி ஆணையத்தின பரிந்துரைகளுக்கு என்.டி.ஏ அரசாங்கம் கட்டுப்படுவது குறித்து முதலமைச்சர்களுக்கு பிரதமர் எழுதிய கடிதம் 15ஆவது ஆணையம் அமைக்கப்பட்டவுடனே ஆவியாகிவிட்டது.

1976 இல் அமைக்கப்பட்ட 7ஆவது நிதி ஆணையத்திலிருந்து முதல் 14ஆவது ஆணையங்களுள் 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டுமே வரி பகிர்வுக்கு அடிப்படையாக எடுக்கப்பட்டது. 14ஆவது எஃப்சி 1971 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு 17.5 சதவிகித மதிப்பீட்டையும் யும் 2011 கணக்கெடுப்புக்கு 10 சதவிகித மதிப்பீட்டையும் வழங்கியபோது எந்த ஆட்சேபனைகளும் எழவில்லை. தற்போதைய, 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கான 15 சதவிகித மதிப்பீடு வருமான இடைவெளிகளுக்கான 45 சதவிகித மதிப்பீடு , மக்கள் தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கான 12.5 சதவிகித மதிப்பீடு மற்றும் வரி வசூல் முயற்சிகளுக்கு 2.5 சதவிகித மதிப்பீடு ஆகியவை பல மாநில வளர்ச்சியைத் தடைப்படுத்தின.

மிகப்பெரிய வருவாய் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஆந்திரா இந்த ஆண்டு ரூ .1,521 கோடி இழப்பையும் , தெலுங்கானா ரூ .2,400 கோடி இழப்பையும் சந்திக்க உள்ளன. மக்கள்தொகைக் கட்டுப்பாட்டை திறம்பட செயல்படுத்திய மாநிலங்களுக்கான பங்குகளை நிதி ஆணையம் குறைத்துவிட்டது போல் தெரிகிறது. மாநிலங்களுக்கான செயல்திறன் அளவுருக்களை அமைப்பதற்கும் அதற்கேற்ப நிதி ஒதுக்குவதற்கும் மைய அரசு பரிசீலித்து வருவதால், அடுத்த 5 ஆண்டுகளில் தென் மாநிலங்களுக்கான பரிந்துரைகள் மோசமாக இருக்கும்.

15ஆவது எஃப்சி அமல்படுத்தப்பட்ட ஐந்தாண்டு காலத்திற்கு மொத்தம் ரூ .175 லட்சம் கோடி வருவாயை மையம் மதிப்பிட்டிருந்தாலும், தற்போதைய மந்தநிலை பொருளாதாரத்தை சிதைத்துள்ளது. மாநிலங்களுக்கு வரி விதிப்பதன் மூலமும், வருவாயை மையத்திற்கு திருப்புவதன் மூலமும் ஒரு ஒற்றையாட்சி அரசாங்கத்திற்கு தேசிய ஜனநாயக கூட்டணி வழி வகுத்து வருகிறது. தேசிய பாதுகாப்புக்கு மத்திய மற்றும் மாநிலங்கள் சமமான பொறுப்பை ஏற்றுக்கொள்வது குறித்து முன்வைக்கப்பட்ட திட்டத்தின் படி, மத்திய அரசு ஏற்கனவே தேசிய பாதுகாப்பு நிதிக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வைத்து, மீதமுள்ள நிதியை மாநிலங்களின் வளர்ச்சிக்கு பிரிக்கும் பணியில் ஏற்கனவே ஈடுபட்டுள்ளது.

இது நடக்க நேர்ந்தால், மாநிலங்களின் வருவாயைக் குறைக்கும் விதமாக மாநில நிதி ஒதுக்கீடு குறைக்கப்படலாம் . விவசாய கடன் தள்ளுபடி, மின்சாரத் துறை மறுசீரமைப்பு ஆகியவற்றின் சுமைகளுடன் மாநிலங்கள் ஏற்கனவே போராடி வருகின்றன. அக்டோபர் மாத ரிசர்வ் வங்கி அறிக்கை, முதலீட்டுச் செலவுகள் 2017-19 ஆண்டுகளில் குறைந்துவிட்டதாக வெளிப்படுத்தியது.

மாநிலங்களின் கடன் வசூல் அதிகரிப்பு மற்றும் மையத்திலிருந்து பெருமளவில் நிதி பரிமாற்றம் ஆகியவையே மாநிலங்கள் வரி விதிக்கக்கூடிய மற்றும் வரி விதிக்கப்படாத வருவாய்களில் கவனம் செலுத்தாமல் இருப்பதற்குக் காரணமென்பதை இந்திய ரிசர்வ் வங்கி தம் அறிக்கைகளில் வெளிக்கொணர்ந்தது. மக்கள் இணக்கக் கொள்கைகளை வகுக்கவே மைய அரசு நிதி ஆணையத்தை உருவாக்கினாலும் இது நிதி கமிஷன்களின் நோக்கத்தைச் சேதப்படுத்துகிறது. இது மந்தநிலையை விட பெரிய அச்சுறுத்தலாகும்.

Categories

Tech |