Categories
மாநில செய்திகள்

“என் தொண்டை பாதித்தாலும், தொண்டு பாதிக்கப்படாது”….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு….!!!

சென்னை குருநானக் கல்லூரியில் பொன்விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து முழு அளவிற்கு உடல் நலம் பெற்று வரவில்லை என்று சொன்னாலும், இடையிலே சில நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்க கூடிய வாய்ப்பை பெற்று வருகிறேன். கொரோனா என்ற அந்த தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட காரணத்தால் என்னுடைய தொண்டை சிறிது பாதிக்கப்பட்டிருக்கிறது. தொண்டை பாதிக்கப்பட்டாலும் தொண்டு பாதிக்க கூடாது என்பதற்காக நான் என்னுடைய பணியை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறேன். சமீபத்தில் தமிழகத்தில் எழுந்த சில நிகழ்வுகளை எண்ணிப் பார்க்கிறபோது மனவேதனையாக இருக்கிறது. கல்வி நிறுவனங்கள் நடத்துபவர்கள் அந்த கல்வி நிறுவனங்களை தொழிலாக, வர்த்தகமாக நினைக்காமல் தொண்டாக கல்வி சேவையாகக் கருத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அதனை தொடர்ந்து மாணவச் செல்வங்கள் பட்டங்கள் வாங்குவதற்காக மட்டும் கல்வி நிறுவனங்களுக்கு வரவில்லை. முதலில் தன்னம்பிக்கை, தைரியம், மன உறுதி ஆகியவற்றை அவர்களுக்கு நீங்கள் அளிக்க வேண்டும். எத்தகைய சோதனையும் எதிர்கொள்ள கூடிய ஆற்றல் பெற்றவர்களாக தமிழக மாணவ செல்வங்கள் வளர வேண்டும். உங்களுக்கு ஏற்படும் தொல்லைகள், அவமானங்கள், இடையூறுகள் ஆகியவற்றை மாணவர்கள் அதிலும் குறிப்பாக மாணவிகள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். இதனையடுத்து மாணவியருக்கு பாலியல் ரீதியாகவும், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொல்லை தரும் எத்தகைய இழி செயல் நடந்தாலும் நிச்சயமாக சொல்கிறேன், தமிழக அரசு நடைபெற்ற வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது, உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகளை சட்டத்தின் முன்னிறுத்தி உடனடியாக அதற்குரிய தண்டனை பெற்றுத் தரப்படும். எந்தச் சூழலிலும் தற்கொலை எண்ணத்திற்கு மாணவிகள் தள்ளப்பட க்கூடாது. உயிரே மாய்த்துக்கொள்ள சிந்தனைக் கூடாது. உயிர்ப்பிக்கும் சிந்தனையே தேவை. ஆசிரியர்களாக இருந்தாலும், பெற்றோர்களாக இருந்தாலும் மாணவ- மாணவியரிடம் மனம் விட்டு பேசுங்கள். மேலும் மாணவர்களும் உங்களுடைய பிரச்சனைகளையும் நோக்கங்களையும் கனவுகள்ளையும் பெற்றோரிடம், ஆசிரியர் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று அவர் அறிவுறுத்தினார்.

Categories

Tech |