தமிழகத்தில் போக்குவரத்து விபத்துக்கள் அதிகளவில் நடைபெறுவதால் போக்குவரத்து விதிமுறைகளை அரசு கடைமையாக்கி வருகிறது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே முறையாக ஆர்டிஓ அலுவலகத்தில் விண்ணப்பித்து ஓட்டுநர் உரிமம் பெற வேண்டும். அவ்வாறு பெற்றவர்கள் மட்டுமே வாகனங்களை ஓட்ட முடியும்.ஆனால் தற்போது ஓட்டுநர் உரிமம் பெறாமல் பள்ளி மாணவர்கள் கூட இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துகின்றனர்.
அதனால் பல விபத்துகளும் ஏற்படுவதாக போக்குவரத்து துறை தெரிவிக்கிறது. இதனை தடுக்கும் விதமாக திருப்பூர் போக்குவரத்து துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது திருத்தம் செய்யப்பட்ட மோட்டார் வாகன சட்டம் 2019 சட்டப்பிரிவு 199 ஏ இன்படி ஓட்டுனர் உரிமம் பெறாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டினால் அந்த வாகனத்தை ஒட்டிய பெற்றோர்கள் அல்லது பாதுகாவலருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
அது மட்டுமல்லாமல் 25 வயது வரை சம்பந்தப்பட்டவர் ஓட்டுநர் உரிமம் பெற முடியாது .அந்த வாகனத்தை 12 மாதங்கள் இயக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சட்டத்தை தீவிரமாக கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.