தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மக்களை வாட்டி வதைத்த கொரோனா குறைந்து வந்த நிலையில் புதிதாக குரங்கு அம்மை பாதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. கேரளாவில் குரங்குமை பாதிப்பு வெளியாகி பதிவாகியுள்ளதால் தமிழ்நாட்டில் தடுப்பு நடிகைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களை தொடர்ந்து கண்காணிப்பதும், கேரளா, ஆந்திரா எல்லைகளில் இருந்து வருபவர்களுக்கு குரங்கு அம்மை ஏதாவது உள்ளதா என்பதை கண்டறியவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களை தொடர்ந்து கண்காணிப்பது கேரளா, ஆந்திர எல்லைகளில் இருந்து வருபவர்களை, குரங்கு அம்மை பாதிப்பு ஏதாவது உள்ளதா என்பதை கண்டறியவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாநில எல்லைகளில் இருந்து வருபவர்களுக்கு எச்சரிக்கையாக பரிசோதனை செய்வது, கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாவட்ட நிர்வாகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொடர்ந்து மக்கள் நல்வாழ்வு துறையோடு இணைந்து, டெங்கு, மலேரியா போன்ற நோய்களிலிருந்து மக்களை காப்பதற்கு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.