தோல் தடிமனாகும் நோயால் குஜராத் மாநிலத்தில் சுமார் ஆயிரம் கால்நடைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் தோல் தடிமனாகும் நோய் கால்நடைகள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. கொசுக்கள், ஈக்கள், பேன்கள்,குழவிகள் மற்றும் மாசுபட்ட உணவு நீரால் இந்த தோல் தடிமன் நோய் கால்நடைகளுக்கு அதிவேகமாக பரவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த கொடிய நோயால் இதுவரை சுமார் ஆயிரம் கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும் 33,000 கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.பாதிக்கப்பட்ட கால்நடைகளை தனிமைப்படுத்தி தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளும் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன. திடீரென நோய் தாக்குதல் காரணமாக ஆயிரம் கால்நடைகள் உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.