Categories
உலக செய்திகள்

ராக்கெட்டின் சிதைவுகள் எங்கு விழும்…. வெளியான தகவலால் பரபரப்பு….!!

சீனாவில் சமீபமாக ஏவிய லாங் மார்ச் 5 பி ராக்கெட்டின் சிதைவுகள் பூமியில் விழ வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனா நாட்டில் ஹைனான் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் சமீபமாக லாங் மார்ச் 5பி ராக்கெட்டை வென்சாங் ஏவுதளத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் (பெய்ஜிங் உள்ளூர் நேரப்படி) சுற்றுப்பாதையில் ஏவப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹைனானில் இருந்து ஏவப்பட்ட சீன ராக்கெட்டின் சிதைவுகள் பூமியில் ஏதாவது ஒரு இடத்தில் விழும் என எதிர்பார்க்கப்படுவதாக நியூஸ்வீக் தெரிவித்துள்ளது.

பொதுவாக ஒரு ராக்கெட்டை விண்ணில் செலுத்தும்போது ராக்கெட்டின் முதல் பாகம் அதன் எரிபொருளை முழுவதுமாக எரித்துவிட்டால், ராக்கெட்டின் கூடுதல் எடையைக் குறைக்க வெற்றுப் பகுதி அதிலிருந்து பிரிக்கப்படும். அந்த ராக்கெட் பாகம் பூமியை நோக்கி வரும்போது வளிமண்டலத்தில் எரிந்துவிடும். ஆனால் லாங் மார்ச் 5 பி ராக்கெட், மிகப்பெரியது ஆகும். இது 176 அடி உயரம் மற்றும் 1.8 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் எடையுள்ளது என்று நியூஸ் வீக் தெரிவித்துள்ளது. ஹார்வர்ட்-ஸ்மித்சோனியன் வானியற்பியல் மையத்தின் வானியலாளர் ஜொனாதன் மெக்டொவல்  டுவிட்டரில் கூறியதாவது, “சீனாவிலிருந்து ஏவப்பட்ட ராக்கெட்டின் பூஸ்டர் வளிமண்டலத்தில் சுற்றுப்பாதையில் உள்ளது என்றும், முழுவதுமாக எரியாத நிலையில், பூமியில் எங்கேயாவது விழலாம்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |