இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஏரிப்பாளையம் சேரன் நகர் பகுதியில் தாதான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு கை, கால்கள் செயல் இழந்து வாய் பேச முடியாமல் வீட்டில் இருந்து வருகிறார். இவருடைய மனைவி தெய்வானை சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார். இந்த தம்பதியினருக்கு முத்துலட்சுமி என்ற மகள் உள்ளார். இவருக்கும் உரல்பட்டி பகுதியில் வசிக்கும் சதீஷ்குமார் என்பவருக்கும் கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
கடந்த 22-ஆம் தேதி முத்துலட்சுமி பெற்றோர் வீட்டிற்கு வந்து அங்கேயே தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் முத்துலெட்சுமி திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதில் உடல் முழுவதும் தீயில் கருகி துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முத்துலெட்சுமியின் பெரியப்பா குப்பன் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.