Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

4 மாத கர்ப்பிணியான சிறுமி…. பெற்றோர் அளித்த புகார்…. போக்சோவில் வாலிபர் கைது….!!

சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்ட வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலையை அடுத்துள்ள கிராமத்தில் 16 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி அந்த சிறுமி வீட்டில் இருந்து காணாமல் போனார். இதுகுறித்து சிறுமியின் தாய் உடுமலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் சிறுமியும் அதே பகுதியில் வசிக்கும் லோகேஷ் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் லோகேஷ் சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று கோவிலின் முன்பு வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அதன்பின் அந்த சிறுமியை கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறைக்கு அழைத்துச் சென்று கணவன்-மனைவி என கூறி வீடு எடுத்து தங்கியுள்ளனர். மேலும் லோகேஷ் சிறுமியுடன் பலமுறை உடலுறவு வைத்துள்ளார். இதனால் சிறுமி தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த உடுமலை மகளிர் காவல்துறையினர் லோகேஷை குழந்தைத் திருமணச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து காவல்துறையினர் சிறுமியை மீட்டு பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |