Categories
உலக செய்திகள்

அடுத்த ஐன்ஸ்டீன் …. சுட்டிக் குழந்தையின் தலை முடி…. சமூக வலைத்தளங்களில் வைரல்….!!!!!!!!!

ஐன்ஸ்டீன் கண்டுபிடிப்புகள் எந்த அளவிற்கு உலக அளவில் பிரபலமோ  அவருடைய தலைமுடியும் அதே அளவிற்கு பிரபலம் என கூறலாம். ஐன்ஸ்டீன் என்றால் அவருடைய படியாத தலைமுடி தான் நிச்சயம் நமக்கு ஞாபகத்தில் வரும். ஐன்ஸ்டீனை போலவே தலைமுடியை கொண்டிருப்பதாக சமூக வலைத்தளத்தில் குட்டி குழந்தை ஒன்று பிரபலம் அடைந்து கொண்டிருக்கின்றது. இங்கிலாந்தில் கிரேட் பிரேக்கிங் ஹாமில் உள்ள 18 மாத குழந்தை லைலோ டேவிஸ் uncombable hair syndrome எனப்படும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு தலைமுடியானது வறண்டு குச்சி போல நீண்டிருக்கும். இதை வாரி படிய வைக்கவே முடியாது. உலகில் நூறில் ஒருவருக்கு இந்த சிண்ட்ரோமால்  பாதிக்கப்படுபவர்கள் என நிபுணர்கள் கூறியுள்ளனர். வெள்ளி பொன்னிறம் அல்லது வைக்கோல் நிறத்தில் தலைமுடி நீண்டு கொண்டிருக்கும் முதன்முதலாக 1973 ஆம் வருடம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சிண்ட்ரோம்  மரபணுவில் ஏற்படும் ஜீன் மாறுதலால் உருவாகின்றது. இதனை குணப்படுத்துவதற்கு சிகிச்சைகள் எதுவும் இல்லை என்றாலும் பிள்ளைகள் வளர்ந்து பருவமடையும் போது ஓரளவுக்கு மாறலாம் அல்லது முழுமையாக சரியாகலாம் என அமெரிக்கா அரசின் மரபணு மற்றும் அரிய நோய்கள் தகவல் மையம் கூறியுள்ளது.

Categories

Tech |