Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மின் கம்பங்களை 3 கி.மீ தூரம் சுமந்து சென்ற கிராம மக்கள்…. வலைதளத்தில் வைரலாகும் காட்சிகள்…!!

பழங்குடியின கிராம மக்கள் மின் கம்பங்களை 3 கி.மீ தூரம் சுமந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மீசைகோனூரான் தொட்டி மலை கிராமத்தில் சோளகர் இனத்தை சேர்ந்த 15 பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதுவரை இந்த கிராமத்தில் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்பட்ட கிராம மக்கள் பல ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்க வேண்டி கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் மின்வாரிய அதிகாரிகள் இந்த கிராமத்திற்கு மின் இணைப்பு வழங்க கடந்த சில நாட்களுக்கு முன்பு நடவடிக்கை எடுத்தனர்.

அதன்படி 2 மின் கம்பங்களை லாரியில் ஏற்றி கானகரை கிராமத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கிருந்து மீசைகோனூரான் கிராமத்திற்கு செல்ல சாலை வசதி இல்லை. இதனால் மின் கம்பங்களை அங்கேயே இறக்கிவிட்டு சென்றனர். இந்நிலையில் மீசைகோனூரான் கிராமத்தில் வசிக்கும் ஆண்களும், பெண்களும் 3 கிலோமீட்டர் தூரம் வரை மின் கம்பங்களை தோளில் சுமந்து சென்றுள்ளனர். இந்த காட்சியை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.

Categories

Tech |