Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சுருண்டு விழுந்து இறந்த வீரர்…. ஆடுகளத்தில் நடந்த சம்பவம்…. கடலூரில் பரபரப்பு…!!

கபடி வீரர் ஆடுகளத்திலேயே திடீரென சுரண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள மானடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த கபடி குழு சார்பில் கடந்த 23-ஆம் தேதி மாவட்ட அளவிலான கபடி போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் 63 அணிகள் பங்கேற்றன. நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் கீழக்குப்பம் மற்றும் பெரியபுறங்கணி அணிகள் மோதின. இதில் பெரியபுறங்கணி அணியில் இருந்த விமல்ராஜ் என்பவர் ரெய்டு சென்றுள்ளார். அவரை எதிர் அணியினர் பிடிக்க முயன்றனர். அவர்களிடம் பிடிபடாமல் இருக்க விமல்ராஜ் துள்ளி குதித்து தாவினார். அப்போது கீழே விழுந்த விமல்ராஜை எதிர் அணியை சேர்ந்த ஒருவர் மடக்கி பிடித்தார். அந்த நபரின் கால் விமல் ராஜின் மார்பு மற்றும் தொண்டை பகுதியில் இருந்தது.

அப்போது எழுந்திருக்க முடியாமல் சிரமப்பட்ட விமல்ராஜ் திடீரென மயங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சகவீரர்கள் விமல் ராஜை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் விமல்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் போட்டியை நிறுத்திவிட்டு உயிரிழந்த வீரரின் உடலுக்கு அனைவரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |