Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“பஸ் டிரைவருக்கு திடீரென தலைச்சுற்றல்”….. தடுப்புச்சுவர் மீது மோதி விபத்து…..!!!!

பஸ் டிரைவருக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டடு தடுப்புச் சுவர் மீது மோதி பஸ்ஸை நிறுத்தியதால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்த்தபினார்கள்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பால்மராலீஸ் பகுதிக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் காலையில் பால்மராலீஸ் பகுதியில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்து குன்னூரை நோக்கி வந்து கொண்டிருந்த பொழுது பஸ் டிரைவர் இளங்கோவிற்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டது.

இதனால் அவர் சாலையோர தடுப்புச் சுவர் மீது ஒட்டி நிறுத்தினார். பஸ்ஸின் ஒரு பகுதி தடுப்புச் சுவரின் மீது மோதி நின்றது. இதனால் பஸ்ஸில் பயணித்த 40-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்கள். இதுயடுத்து அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் இளங்கோ மற்றும் காயமடைந்த பயணிகளை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இரண்டு பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |