இந்தியாவில் தற்போது 4 ஜி அலைக்கற்றை பயன்பாட்டில் இருந்து வருகிறது.அதனை 5 ஜி அலைக்கற்றையாக உயர்த்த தொலை தொடர்பு ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டது.அதற்கான சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்த சோதனைகள் முடிவடைந்ததை தொடர்ந்து 5 ஜி அலைக்கற்றையை ஏலம் விடுவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. 5 ஜி அலைக்கற்றை ஏலத்தைப் பெறுவதற்கு பல்வேறு தொலை தொடர்பு நிறுவனங்கள் இடையே பலத்த போட்டி ஏற்பட்டது. இந்த ஏலத்தில் ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ, அதானி டேட்டா நெட்வொர்க் ஆகிய 4 நிறுவனங்கள் இடையே தான் கடும் போட்டி நிலவியது.
இந்நிலையில் பெரிய எதிர்பார்ப்புகளுடன் நடைபெற்ற 5 ஜி ஏலத்தின் 4 சுற்றுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நான்கு சுற்றுகளின் மூலம் இதுவரை அரசுக்கு ரூ.1,45,000 கோடி வருவாய் கிடைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் ஆகஸ்ட் 14ஆம் தேதிக்குள் 5 ஜி ஏலம் முடிக்கப்பட்டு வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் நாட்டில் 5g சேவை தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி தெரிவித்துள்ளார்.