ஈரோட்டில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலை எடுத்து சென்னையிலிருந்து மூன்று பேர் கொண்ட குழுவினர் ஈரோடு விரைந்து விசாரணையை தொடங்கினர். ஈரோடு மாணிக்கம்பாளையம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்து இரண்டு பேரை மட்டும் ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், பெங்களூர் திலக் நகர் பகுதியில் அல்கெய்தா தீவிரவாதஅமைப்புடன் தொடர்பில் இருந்த அக்தர் உசேன் லஸ்கர் என்பவரை கடந்த 24ஆம் தேதி கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த தகவல் அடிப்படையில் சேலத்தில் பதுக்கி இருந்த அப்துல் அலி ஜூபா என்பவரை மத்திய குற்ற பிரிவு போலீசார் கைது செய்தனர்.