Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திடீரென கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி…. நொடியில் தப்பிய உயிர்….!!!!

நெல்லை மாவட்டத்தில் இருந்து நேற்று வாழை குலைகளை ஏற்றுக்கொண்டு ஒரு மினி லாரி களியாக்காவிளை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி இரவு 9 மணிக்கு நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் உள்ள பள்ளிவாசல் முன் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது லேசாக உரசியது. அதன் பிறகு சாலையோரம் நின்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு அங்கு இருந்த ஒரு பலசரக்கு கடைக்குள் புகுந்தது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து தகவல் அறிந்த வடசென்னை போலீசார் மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். மேலும் விபத்தில் மினிலாரியின் முன் பகுதி சேதமடைந்தது. இந்த விபத்தினால் அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |