Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில்…. 1 முதல் 5-ம் வகுப்பு வரை…. முதல்வர் கையெழுத்து…!!!!

தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி நாட்களில் காலையில் சத்தான உணவை சாப்பிடுவதற்காக சிற்றுண்டி வழங்கப்படும என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த திட்டத்தை முதற்கட்டமாக ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் செயல்படுத்த உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில், 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச காலை சிற்றுண்டி வழங்குவதற்கான அரசாணையில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார். பள்ளி மாணவர்களுக்கு மனநலம் மற்றும் உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வு வாகனங்களை இன்று கொடியசைத்து தொடக்கி வைத்தபோது, அவர் இதனை அறிவித்தார். ஏற்கெனவே பள்ளிகளில் மதிய உணவு திட்டம் இருக்கும் நிலையில், இனி காலை உணவும் வழங்கப்படும்.

Categories

Tech |