Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

‘ஜாலி ட்ரிப்பா… கொலை பண்ற ட்ரிப்பா…’ – வெளியான ‘ட்ரிப்’ டீஸர்..!!

யோகிபாபு, சுனைனா நடிப்பில் உருவாகி வரும் ‘ட்ரிப்’ படத்தின் டீஸர் நேற்று வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் நடிகர் யோகிபாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ட்ரிப்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை சுனைனா நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இந்தியாவில் முதல் முறையாக அமெரிக்காவின் பிட்புல் ரக நாயும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. இப்படத்தை சாய் ஃபிலிம் ஸ்டூடியோஸ் சார்பில் ஏ.விஸ்வநாதன், பிரவீன் குமார் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

செப்டம்பர் மாதம் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று மாலை விஜய் சேதுபதி இப்படத்தின் டீஸரை வெளியிட்டுள்ளார். அதில் நண்பர்கள் விடுமுறை கொண்ட ஒரு காட்டுக்குள் ட்ரிப் செல்கின்றனர். அங்கு அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை திகிலுடன் கூடிய நகைச்சுவையாக காட்சியமைத்துள்ளனர்.

யோகிபாபு, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் ஆகியோரின் கூட்டணியில் நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லாது கதை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் படம் வெளியாகும் தேதி குறித்தும் ட்ரெய்லர் குறித்தும் படக்குழு அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |