Categories
மாநில செய்திகள்

தமிழக TET தேர்வு எழுதுபவர்களுக்கு….. இன்றே கடைசி நாள்…. உடனே கிளம்புங்க….!!!!

தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் டெட் எனப்படும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தற்போது ஆசிரியர் தகுதி தேர்வு தாள் ஒன்றுக்கு 2,30,878 பேரும், தாள் இரண்டுக்கு 4,01,886 பேரும் மொத்தம் 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல கோரிக்கை மனுக்கள் வந்தது. இந்நிலையில் அரசு அதை ஏற்று கால அவகாச வழங்கியது. ஆனால் அப்போது ஏற்றப்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக அந்த செயல்முறை நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனையடுத்து சில நாட்களுக்கு முன் ஆசிரியர் தகுதி தேர்வு தாள்1 மற்றும் தாள் 2 விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் ஜூலை 27 ஆம் தேதி வரை திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் இணையத்தில் வழிவகை செய்தது. மேலும் விண்ணப்பத்தாரர்கள் திருத்தங்கள் மேற்கோள்ள அளிக்கும் விண்ணப்பங்கள் மீது ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தங்கள் மேற்கொள்வதற்கான வழிமுறைகள்.

  • விண்ணப்பதாரர்கள்‌ விவரங்களைப்‌ புதுப்பித்தவுடன்‌ முன்பக்கத்திலுள்ள சமர்ப்பி  பொத்தானை அழுத்தி செய்யப்பட்ட மாற்றங்களை உறுதி செய்ய வேண்டும்‌. அவ்வாறு செய்யவில்லை எனில்‌ செய்யப்பட்ட மாற்றங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்படாது.
  • சமர்ப்பி (Submit) பொத்தானை அழுத்தி, உறுதி செய்யவில்லை எனில்‌ முந்தைய விவரங்கள்‌ மட்டுமே பரிசீலிக்கப்படும்‌.
  • விண்ணப்பத்தைச்‌ சமர்ப்பித்து பணம்‌ செலுத்திய விண்ணப்பதாரர்கள்‌ மட்டுமே மாற்றங்களைச்‌ செய்ய அனுமதிக்கப்படுவார்கள்‌.
  • விண்ணப்பதாரர்கள்‌ மாற்றங்களைச்‌ செய்து விண்ணப்பத்தைச்‌ சமர்ப்பித்த பின்‌ அதில்‌ மேலும்‌ மாற்றங்களைச்‌ செய்யக்‌ கூடாது. எனவ, விண்ணப்பத்தைச்‌ சமர்ப்பிக்கும்‌ முன்‌ மீளவும்‌ சரிபார்த்துக்‌ கொள்ளவும்‌.
  • விண்ணப்பதாரர்கள்‌ தங்கள்‌ விண்ணப்பத்தில்‌ எந்தவொரு மாற்றமும்‌ செய்யவில்லை எனில்‌ முந்தைய தரவுகளே பரிசீலிக்கப்படும்‌.
  • விண்ணப்பதாரர்கள்‌ கைபேசி எண்‌ மின்னஞ்சல்‌ முகவரி மற்றும்‌ கல்வித்தகுதி ஆகியவற்றில்‌ மாற்றங்கள்‌ செய்ய இயலாது. விண்ணப்பதாரர்கள்‌ தங்கள்‌ தேர்வுகளான தாள்‌ 1 , தாள்‌ 2 ஆகியவற்றில்‌ எந்த மாற்றமும்‌ செய்ய இயலாது.

மேலும் ஆன்லைனில் திருத்தம் மேற்கொள்வதற்கு இன்றை கடைசி நாள் என்பதால் இன்னும் காலதாமதிக்காமல் உடனே பதிவுகளை மேற்கொள்ளுமாறு TN TRB தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |