சிம்மம் ராசி அன்பர்கள்..!! இன்று மனதில் நம்பிக்கை குறைவு கொஞ்சம் ஏற்படலாம். வியாபாரத்தில் அளவான மூலதனமே போதுமானதாக இருக்கும். ஆதாயம் சீராக இருக்கும். பணியாளர்கள் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் தேர்ச்சி பெற கூடுதலாக முயற்சி செய்ய வேண்டும். இன்று மனதில் தெம்பு உருவாகும். வீடு வாகனம் வாங்க கூடிய எண்ணம் கைகூடும். வாக்கு வன்மையால் காரியங்கள் சிறப்பாக நடக்கும்.
ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். தொழில் வியாபாரம் நல்ல நிலைக்கு உயரும். போட்டிகள் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மற்றவர்கள் மத்தியில் உயர்ந்து காணப்படுவீர்கள். விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய சூழ்நிலை வரலாம். இன்று சரியான நேரத்திற்கு தூங்க செல்வது மிகவும் நல்லது. கூடுமானவரை மனதை கொஞ்சம் அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் இன்று ஆலயம் சென்று வாருங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெளிர் நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காகத்திற்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்வில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்ட திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 9 மற்றும் 1
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம் மற்றும் ஆரஞ்சு நிறம்