Categories
மாநில செய்திகள்

45 அடி உயரத்தில் சிற்பக்கலை தூண்….. கண் கவரும் கலைநயம்….. முதல்வர் இன்று திறந்து வைப்பு….!!!!

மாமல்லபுரத்தில் 45 அடி உயர சிற்பக்கலை துணை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார்.

மாமல்லபுரம் இசிஆர் நுழைவு வாயிலில் கலை நயத்துடன் 45 அடி உயரத்திற்கு சிற்பக்கலை தூண் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். பூம்புகார் என அழைக்கப்படும் தமிழகத்தின் கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கலகம் தமிழ் கைவினை கலைஞர்களின் உழைப்பினால் தயாரிக்கப்படும் பொருட்களின் விற்பனையை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக இது செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

மாமல்லபுரத்திற்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் கைவினை கலைஞர்களையும் ஒன்றிணைக்கும் வகையில் 5. 61 கோடி மதிப்பில் கைவினை சுற்றுலா கிராமம் எனும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 1.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஐந்துரதம் பகுதியில் 30க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாமல்லபுரம் இசிஆர் நுழைவு வாயிலில் 45 அடி உயரம் கொண்ட சிற்பக்கலை தூள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக உருவாக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாராகியுள்ளது.

இந்த சிற்பக்கலை தூண் நான்கு நிலைகளைக் கொண்டது. தரையிலிருந்து முதல் நிலையில் 4 பெரிய யானைகள், நான்கு சிறிய யானைகள், இரண்டாம் நிலையில் 4 மையில்கள், மூன்றாவது நிலையில் 4 யாழி, நான்கு பெரிய யானைகள் சிறிய நான்கு யாணைகள், நான்காம் நிலையில் நான்கு பெரிய சிங்கங்கள் என கண்கவரும் வகையில் ஒரு கலை நயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை மு க ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கின்றார்.

Categories

Tech |