தமிழ் சினிமாவில் எப்பிக் தியேட்டர் நிறுவனம் முதன்முதலாக தயாரித்துள்ள படம் “இனி ஒரு காதல் செய்வோம்”. இப்படத்தை அறிமுக இயக்குனர் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ளார். அதனை தொடர்ந்து இப்படத்தின் மூலம் அஜய் பாலகிருஷ்ணா கதாநாயகமாக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தின் கதாநாயகியாக ஸ்வேதா ஷ்ரிம்டன் நடித்துள்ளார். இதனையடுத்து வர்கீஸ், மேத்யூ, ராஜ்குமார், விக்னேஷ் சண்முகம் மனு பார்த்திபன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கோபிநாத் சுகுமார் ஒளிப்பதிவு செய்ய ரேவா என்னும் பெண் இசையமைப்பாளர் இசையமைத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் கார்த்திக் நேத்தா இந்த படத்தை அனைத்து பாடல்களையும் எழுதி உள்ளார். மேலும் நிழல்கள் ரவி அவர்கள் குரலில் சமீபத்தில் வெளியான இத்திரைப்படத்தின் பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தொண்ணூறுகளில் பிறந்தவர்களின் கல்லூரி வாழ்க்கை, நட்பையும், காதல் மற்றும் பிரிவையும் பிரதிபலிக்கு வண்ணம் இப்படம் கதையாக அமைந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்களை வருகின்ற ஆகஸ்ட் மாதம் வெளியிடவும் மற்றும் திரைப்படத்தை வருகின்ற கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிடவும் படக் குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். மேலும் படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.