Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

11-ம் வகுப்பு மாணவியை….. அப்படி வர சொன்ன காதலன்….. அடுத்தடுத்து அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்….!!!!

11ம் வகுப்பு மாணவியை வீடியோ காலில் நிர்வாணமாக பேச சொல்லி வீடியோ பதிவு செய்த மாணவன் மீது சட்டத்தின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை அருகே உள்ள கோவில்பாளையத்தை சேர்ந்த 16 வயது சிறுமி அந்த பகுதியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 10-ம் வகுப்பு படித்த போது, இவரது வகுப்பில் படித்த மாணவன் ஒருவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த மாணவன் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் அத்துடன் அவர் பள்ளி படிப்பை முடித்துவிட்டார். பின்னர் மாணவியிடம் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். மாணவியை காதலிப்பதாக கூறி ஆசை வார்த்தைகள் பேசியுள்ளார். அதை நம்பிய மாணவி போனில் பேசி வந்த நிலையில் வீடியோ கால் மூலமாக பேசி காதலை வளர்த்து வந்துள்ளனர்.

வீடியோ கால் பேசும் போது மாணவியை நிர்வாணமாக பார்க்க விரும்புவதாக சிறுவன் தெரிவிக்க முதலில் மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் சிறுவன் தொல்லை தாங்க முடியாமல் மாணவி நிர்வாணமாக வந்து வீடியோ காலில் பேசியுள்ளார். அந்த காட்சிகளை சிறுவன் தனது செல்போனில் பதிவு செய்து கொண்டான். இது தெரியாத மாணவி தொடர்ந்து சிறுவனிடம் பழகி வந்துள்ளார். ஒருநாள் நிர்வாணமாக இருக்கும் வீடியோவை அந்த மாணவியிடம் காட்டி தனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் உனது பெற்றோருக்கு அனுப்பி விடுவேன் என்றும் நிரட்டியுள்ளார்.

சிறுவன் பொய் கூறுவதாக கூறி நினைத்து சிறுமி என்னிடம் பொய் சொல்லி ஏமாற்ற நினைக்காதே என்று பேசிவிட்டு சென்றுவிட்டார். அடுத்த நிமிடம் மாணவியின் செல்போனுக்கு அவர் நிர்வாணமாக பேசிய வீடியோ காட்சிகளை அந்த சிறுவன் அனுப்பி வைத்துள்ளான். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி தனது பெற்றோரிடம் இது தொடர்பாக கூறி அழுதுள்ளார். இதை தொடர்ந்து அவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Categories

Tech |