Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நீங்கள் அனைவரும் விசாரணைக்கு வர வேண்டும்…. கத்தியை இடுப்பில் மறைத்து வைத்திருந்த வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

விசாரணைக்கு வந்த வாலிபர் கத்தியை கொண்டு வந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெலாகுப்பம் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூரியபிரகாஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சூரியபிரகாஷ் ,நிர்மல்ராஜ்  என்பவருடன் சேர்ந்து  பாரதிதாசன்பேட்டை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சூர்யா, லோகநாதன், அய்யப்பன், பிரகாஷ் என்ற 4 பேர் சூரியபிரகாஷ் , நிர்மல்ராஜ் ஆகியோரிடம்  தகராறு செய்துள்ளனர். மேலும் அவர்கள் 2 பேரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் 8  பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு அழைத்தனர். அப்போது விசாரணைக்கு வந்த அய்யப்பன் தனது இடுப்பில் கத்தியை மறைத்து வைத்துள்ளார்.இதனை  பார்த்த  காவல்துறையினர் கத்தியை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |