Categories
உலக செய்திகள்

இலங்கையில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு…. இணையதளங்களில் 40 லட்சம் கார்கள் முன்பதிவு…!!!

இலங்கையில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு இருக்கும் நிலையில், இணையதளத்தில் 40 லட்சம் வாகனங்கள் எரிபொருக்காக முன்பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியதால் அங்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ரணில் விக்ரவசிங்கே புதிய அதிபராக பொறுப்பேற்றார். தற்போது, எரிவாயு பற்றாக்குறை உட்பட பல பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது பற்றி அமைச்சரவையின் செய்தி தொடர்பாளராக இருக்கும் பந்துல குணவர்தன தெரிவித்திருப்பதாவது, நாட்டில் ரேஷன் முறைப்படி ஒவ்வொரு காருக்கும் ஒவ்வொரு வாரம் எரிபொருள் அளிக்கப்பட்டு வருகிறது. இணையதளத்தின் மூலமாக முன்பதிவு செய்த மக்களுக்கு மட்டும் தான் எரிபொருள் வழங்கப்படுகிறது. அதன்படி, கடந்த 25 ஆம் தேதி வரை 40 லட்சத்திற்கும் மேற்பட்ட கார்கள் முன்பதிவு செய்திருக்கின்றன என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |