இந்தியாவில் ஆதார் கார்டு என்பது தனிமனித அடையாள ஆவணமாக உள்ளது. சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை, அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவது என அனைத்திற்கும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட ஆதார் கார்டை வைத்து மோசடி சம்பவங்கள் அதிக அளவு நடந்து கொண்டிருக்கின்றன. ஆதார் கார்டு தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஆதார அமைப்பு சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது.
அதற்காக 1947 என்ற பிரத்தியேகமான ஒரு வாடிக்கையாளர் சேவை எண் வெளியிட்டுள்ளது.இந்த எண்ணிற்கு அழைத்து தங்களது பிரச்சனைகளுக்கு வாடிக்கையாளர்கள் தீர்வு காணலாம். இதற்கு எந்த கட்டணமும் வசூல் செய்யப்படாது. வருடத்தின் அனைத்து நாட்களும் காலை 7:00 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த நம்பருக்கு அழைத்து தீர்வு காணலாம். ஆதார் கார்டு பதிவு ஸ்டேட்டஸ் சொல்லிட்ட அனைத்து தகவல்களையும் பொதுமக்கள் இந்த டோல் ஃப்ரீ நம்பர் சேவையை பயன்படுத்தி தெரிந்து கொள்ள முடியும்.