Categories
மாநில செய்திகள்

தி.மு.க அரசை வெளுத்து வாங்கிய இ.பி.எஸ்…. பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு….!!!

எடப்பாடி பழனிச்சாமிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் போன்றவற்றை எதிர்த்து கடந்த 25-ஆம் தேதி அதிமுக கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது‌. இன்று சென்னையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே போராட்டம் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக கட்சியினர் கலந்து கொண்டனர்.  இந்த போராட்டத்தின் போது பேசிய இபிஎஸ், திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து மக்கள் கடுமையான துன்பத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றார்.

அதன்பிறகு சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு மற்றும் மின்கட்டண உயர்வு போன்ற பல்வேறு பிரச்சனைகளால் மக்கள் நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளதாகவும், எதிர்கட்சியாக எங்களிடம் மக்கள் கோரிக்கை விடுப்பதால் மக்களின் சார்பாக நாங்கள் திமுக அரசை எதிர்த்து நியாயம் கேட்கிறோம். உங்களுடைய அதிகாரம் எதிர்க்கட்சியாகிய எங்களை அழிப்பதற்கு கிடையாது எனவும், மக்களுக்கு நன்மை செய்வது மட்டுமே அரசின் நோக்கமாக இருக்க வேண்டும் எனவும் இபிஎஸ் கூறினார்.

அப்போது திடீரென எடப்பாடி பழனிச்சாமிக்கு மயக்கம் ஏற்பட்டதால், அருகில் இருந்தவர்கள் அவரை கைத்தாங்கலாக ஒரு நாற்காலியில் உட்கார வைத்தனர். அதன் பிறகு இபிஎஸ் முகத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டதால், அவருக்கு மயக்கம் தெளிந்தது. மேலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு போராட்டம், வெயில், அலைச்சல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்மயக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |