Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளே!….. அதிகரிக்கும் சிறப்பு ரயில்கள்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தின் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ரயில் சேவைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டது. அதன்பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமான அளவு குறைந்த நிலையில் ரயில் சேவைகள் படிப்படியாக தொடங்கப்பட்டு முன் பதிவு செய்திருந்தால் மட்டுமே ரயிலில் பயணம் செய்ய முடியும் என்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது கொரோனா பாதிப்பு முழுமையாக குறைந்து வந்ததால் அனைத்து ரயில்களையும் மீண்டும் பழையபடி இயக்க ரயில்வே முடிவு செய்தது. சிறப்பு ரயில்கள் என்றாலே ஒரு பண்டிகை காலத்தில் இயக்கப்படும் என்பது அனைவருக்கும் தெரிந்தது.

ஆனால் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பிறகு கடந்த சில மாதங்களாகவே மக்களின் நலனை கருத்தில் கொண்டு தொடர்ந்து சிறப்பு ரயில்களை தமிழக அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது ஆந்திரா மாநில அரசும் கூட்ட நெரிசலை கருத்தில் வைத்து விசாகப்பட்டினம்- பெங்களூர் சிறப்பு ரயில் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது. அதாவது, விசாகப்பட்டினத்தில் இருந்து தமிழக வழியாக கர்நாடகா மாநிலம் தலைநகரமான பெங்களூருக்கு சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சிறப்பு கட்டண ரயில் விசாகப்பட்டினத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் 7,14, 21, 28 மற்றும் செப்டம்பர் மாதம் 4,11, 18, 25 ஆகிய தேதிகளில் மாலை 3:55 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9 மணிக்கு பெங்களூர் சென்றடையும். இதனையடுத்து பெங்களூரில் இருந்து ஆகஸ்ட் மாதம் 8, 15, 22, 29 மற்றும் செப்டம்பர் மாதம் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் மாலை 3.50 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில் மறுநாள் காலை 11 மணிக்கு விசாகப்பட்டினம் சென்றடையும். மேலும் இந்த சிறப்பு கட்டண ரயில்கள் ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Categories

Tech |