Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் போலீசாருக்கு புதிய சீருடை சின்னம்…. அடுத்த மாதம் அறிமுகம்…..!!!!!

தமிழகத்தில் போலீசாருக்கு புதிய சீருடை சின்னம் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கூடுதல் டிஜிபியின் சீருடையில், தோள்பட்டையில் ஐபிஎஸ், அசோக சின்னம், அதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாள், குறுந்தடி, தொப்பியில் வெள்ளி ஜரிகை ஆலிவ் இலை வடிவ ஐபிஎஸ் சின்னம் இருக்கும். இதேபோல, காவல் ஆய்வாளர்கள் சீருடையின் தோள்பட்டையில் டி.பி. (தமிழ்நாடு போலீஸ்), கயிறு, 3 ஸ்டார் இருக்கும். அதேபோல தமிழக காவல்துறை இன்ஸ்பெக்டரின் சீருடையில் மூன்று ஸ்டார், சப் இன்ஸ்பெக்டர் சீருடையில் இரண்டு ஸ்டார், இடம்பெற்றிருக்கும்.

ஏட்டுவின் சீருடையிள் மூன்று பட்டைகள் போடப்பட்டிருக்கும். எந்தெந்த காவலர்கள் எந்த பிரிவில் பணிபுரிகிறார்கள் என்பதை குறிக்கும் விதமாக இது போன்ற அடையாளங்கள் இடம்பெற்று இருந்த போதிலும் தமிழக காவல்துறை என்பதை குறிப்பிட்டு எந்த சின்னமும் இருக்காது. இந்த நிலையில் “தமிழ்நாடு போலீஸ்” என்கிற எழுத்து பொறிக்கப்பட்ட புதிய சீருடை சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சின்னத்தை காவலர் முதல் டிஜிபி வரை அனைவரும் அணிந்து கொள்வார்கள். புதிய சீருடை சின்னத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம், அசோக சின்னம், தேசிய கொடி ஆகியவை இடம் பெற்றுள்ளன. அத்துடன் காவல் என்ற வார்த்தை தமிழில் இடம் பெற்றிருக்கும்.

Categories

Tech |