அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் ஆந்திரா கடலோர பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல், திருப்பத்தூர், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர், தேனி, இராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, குமரி மற்றும் நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் கனமழை பெய்யும்.
அதன் பிறகு ஜூலை 28-ஆம் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும், திருச்சி, நாமக்கல், சேலம், கரூர், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, மதுரை, தென்காசி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி, நெல்லை, குமரி உள்ளிட்ட பகுதி களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மற்றும் கனமழை பெய்யும். இதனையடுத்து ஜூலை 29-ம் தேதி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால், நாமக்கல், கரூர், சேலம், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திண்டுக்கல், திருப்பூர், தேனி, கோவை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மற்றும் கனமழை பெய்யும்.
இதைத்தொடர்ந்து ஜூலை 30-ம் தேதி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், திருச்சி, நாமக்கல், கரூர், சேலம், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, மதுரை, தென்காசி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி, நெல்லை மற்றும் குமரி உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மற்றும் கன மழை பெய்யும்.
அதன்பிறகு ஜூலை 31-ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, சேலம், திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னை பொறுத்தவரை அடுத்த ஓரிரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், மீனவர்கள் யாரும் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.