Categories
உலக செய்திகள்

300 வருடங்களில் இல்லாத அரிதான வைரம்…. அங்கோலா நாட்டு சுரங்கத்தில் கண்டுபிடிப்பு…!!!

அங்கோலா என்ற ஆப்பிரிக்க நாட்டில் இருக்கும் சுரங்கம் ஒன்றில் அரிதான ஒரு வைரம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

அங்கோலா நாட்டில் இருக்கும் சுரங்கம் ஒன்றில் 300 வருடங்களில் அரிதான ஒரு வைரம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து லுகாபா டயமண்ட் என்ற நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, 170 கேரட் எடை உடைய இளஞ்சிவப்பு நிறம் கொண்ட தி லுலோ ரோஸ் என்ற வைரம் அங்கோலாவின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் லுலோ  என்ற சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது வரை கண்டுபிடிக்கப்பட்ட வைரங்களிலேயே இது மிகவும் பெரிதானது. அந்த சுரங்கத்திலிருந்து கண்கவர் வைரம் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலமாக உலக அளவில் அங்கோலா முக்கிய இடத்தில் இருக்கிறது என்று அந்நாட்டின் கனிம வள அமைச்சர் கூறியிருக்கிறார்.

Categories

Tech |