கூகுள் மேப் செயலில் நீண்ட காலமாக மக்களால் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ட்ரீட் வியூ அம்சத்தை கூகுள் நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சம் இந்தியாவில் சென்னை உட்பட 10 நகரங்களில் இடம் பெற்றுள்ளது. இதன் மூலமாக இருப்பிடங்களின் படங்களை பார்க்க முடியும். இது தொடர்பாக கூகுள் மேப் வெளியிட்ட அறிக்கையில், இரு தனியார் நிறுவனங்களின் உதவியோடு இந்த அம்சம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் கூகுள் மேப் செயலில் ஸ்ட்ரீட் வியூ அம்சத்தின் மூலம் குறிப்பிட்ட இடங்களில் தெளிவான புகைப்படங்கள் பயனர்களுக்கு தெரியும்.
இந்த பத்து நகரங்களில் சுமார் 1.5 லட்சம் கிலோமீட்டர் தூரத்தை ஸ்ட்ரீட் வியு மூலம் புகைப்படமாக பார்க்கலாம். இந்த அம்சம் உள்ளூர் போக்குவரத்து துறை உதவியுடன் விரைவில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாதிலும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த அம்சம் மூலமாக சாலை அமைப்புகள் மற்றும் போக்குவரத்து நெரிசல்களை அறிந்து கொள்ள உதவுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.