Categories
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டி…. விளையாட்டு வீரர்களுக்காக சிறப்பு ஏற்பாடு…..!!!!!!!!!

இந்தியாவில் முதல்முறையாக 44ஆவது சர்வதேச செஸ்  ஒலிம்பியாட்  போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறுகின்றது. இந்த போட்டியில் 188 வெளிநாடுகளில் இருந்து 3000 மேற்பட்ட செஸ் வீரர்கள் கலந்து கொள்ள இருக்கின்றார்கள். நாளை நடைபெறும் தொடக்க விழாவிற்கு பிரதமர் உள்ளிட்ட பலர்  வருகை தருகின்றனர்.  இந்த போட்டியானது ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இன்று 2000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் குவிந்துள்ளனர்.

மேலும் இந்த போட்டியை காண்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். சென்னையில் உள்ள பல ஹோட்டல்களில் அவர்கள் தங்கி இருக்கின்றனர். விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை உள்ள அனைத்து ஓட்டல்களும் இவர்களுக்காக முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சென்னை ஆட்டோ ஓட்டுநர்கள் வரும் சுற்றுலா பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. சுற்றுலா பயணிகளுக்காக மாமல்லபுரம் பகுதியில் சுற்றுலா நட்பு வாகனம் எனும் பெயரில் 25 ஆட்டோக்கள்  நிறுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த ஆட்டோக்களை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் இன்று  தொடங்கி வைத்துள்ளார். மேலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் மற்றும் செஸ் விளையாட்டு வீரர்கள் இலவசமாக பயணம் செய்வதற்கு வசதியாக பத்து சொகுசு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மாமல்லபுரத்தில் இருந்து ஐந்து பஸ்களும் அடையாறில் இருந்து 5 பஸ்களும் செல்ல உள்ளது. இதில் பயணம் செய்வதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. விளையாட்டு வீரர்கள் சென்று வருவதற்கு சுற்றுலா தளங்களில் அந்த பஸ் நிறுத்த வேண்டும் என டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

Categories

Tech |