Categories
உலக செய்திகள்

இலங்கை அதிபரை எதிர்த்து…. மீண்டும் போராட்டத்தில் களமிறங்கிய மக்கள்…!!!

இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கைவை எதிர்த்து மீண்டும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டதால் மக்கள் ஒவ்வொரு நாளும் பல இன்னல்களை அனுபவித்தனர். எனவே, அரசாங்கத்தை எதிர்த்து கடுமையாக போராட தொடங்கினர். போராட்டம் உச்சகட்டத்தை அடைந்து அதிபர் மாளிகைக்குள் மக்கள் அதிரடியாக நுழைந்தனர்.

அப்போது அதிபராக இருந்த கோட்டபாய ராஜபக்சே நாட்டில் இருந்து தப்பிவிட்டார். எனவே ரணில் விக்ரமசிங்கே புதிய அதிபராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர், நாட்டின் நிதி நெருக்கடியை சமாளிக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவரின்  அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தை தொடங்கியுள்ளனர்.

Categories

Tech |