Categories
மாநில செய்திகள்

ஆட்சிக்கு முன் ஒரு பேச்சு….. ஆட்சிக்குப் பின் ஒரு பேச்சு…. இதுதான் திராவிடம் மாடலா?…. எடப்பாடி ஆவேசம்…..!!!!

மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக அரசு அறிவித்துள்ள மின்கட்டண உயர்வு அனைத்து தரப்பு மக்களை பாதிக்கும் என்பதை கண்டித்து தமிழக முழுவதும் திங்கட்கிழமை போராட்டம் நடைபெறும் என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் சென்னையில் இன்று அதிமுக சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இன்று காலை 10 மணிக்கு சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு இந்த போராட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “சொத்து வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் திமுக அரசு உயர்த்தி உள்ளது. திமுக ஆட்சியில் மக்கள் துன்பத்தில் உள்ளன. 14 மாதம் திமுக ஆட்சியில் விலைவாசி, சொத்துவரி, மின் கட்டணம் என அனைத்திலும் வரி உயர்ந்துள்ளது.

எங்கள் பிரச்சனைக்கு குரல் கொடுங்கள் என்று மற்ற கட்சிகளிடம் மக்கள் கோரிக்கை வைக்கின்றன. உங்கள் ஆட்சி அதிகாரம் எதிர்க்கட்சி எதிர்க்கட்சியை அழிப்பதற்கு அல்ல.. மக்களுக்கு நன்மை செய்வதற்கு… அதிமுகவின் வளர்ச்சியை யாராலும் அழிக்க முடியாது. ஈவு இரக்கம் இல்லாமல் மின்கட்டணத்தை திமுக அரசு உயர்த்தி உள்ளது. மின்கடணத்தை உயர்த்தி ஒற்றுமையாக இருக்கும் குடும்பத்தை பிரிக்கும் கட்சியாக திமுக அரசு உள்ளது.

100 யூனிட் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய திமுக அரசு திட்டமிட்டுள்ளது. அதிமுகவின் மாபெரும் போராட்டத்தை கண்டு ஸ்டாலின் நடுங்கி கொண்டிருக்கிறார். மக்களுக்கு நல்லது செய்வதைவிட்டு. அவர் அதிமுகவை அழிக்கப் பார்க்கிறார்; திமுக அழிக்க நினைத்தபோதெல்லாம், வீறுகொண்டு எழுந்து ஆட்சியை பிடித்ததே அதிமுகவின் வரலாறு. கருணாநிதியாலேயே அழிக்க முடியவில்லை; ஸ்டாலினால் முடியுமா… ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு. வந்த பிறகு ஒரு பேச்சு இதுதான் திராவிடம் மாடலா?” என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

Categories

Tech |