பள்ளி மாணவியின் நிர்வாண வீடியோவை வைத்து மிரட்டிய சிறுவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம் பகுதியில் 16 வயதுடைய மாணவி வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் இருக்கும் ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வருடம் பத்தாம் வகுப்பு படித்த போது அவரது வகுப்பில் படித்த மாணவர் ஒருவருடன் இவருக்கு பழக்கம் இருந்துள்ளது. அதன்பின் அந்த மாணவர் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் அத்துடன் தனது பள்ளி படிப்பை முடித்துவிட்டார். இதனை அடுத்து மாணவியிடம் அவர் செல்போனில் பேசுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். பின்னர் மாணவியிடம் தான் காதலிப்பதாக கூறி ஆசை வார்த்தைகள் பேசி உள்ளார். இதை நம்பிய மாணவி அந்த சிறுவனுடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார். பின்னர் இவர்கள் இருவரும் தொலைபேசியில் வீடியோ கால் மூலம் பேசி காதலித்து வந்துள்ளனர்.
அப்போது வீடியோ காலில் பேசும் போது மாணவியை நிர்வாணமாக பார்க்க விரும்புவதாக சிறுவன் கூறியதற்கு அவர் மறுப்பு தெரிவித்து நாட்களை கடத்தியுள்ளார். பிறகு ஒரு கட்டத்தில் சிறுவனின் தொல்லை தாங்காமல் மாணவி நிர்வாணமாக வந்து வீடியோ காலில் பேசி உள்ளார். அதை சிறுவன் தனது செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளார். இதனை அறியாத மாணவி தொடர்ந்து சிறுவனிடம் பழகி வந்துள்ளார். அதன் பிறகு திரும்பவும் நிறுவனமாக வீடியோ காலில் பேசுமாறு மாணவியிடம் சிறுவன் கூறிய போது அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த சிறுவன் நீ ஏற்கனவே ஒரு முறை நிர்வாணமாக நின்றதை நான் வீடியோவாக பதிவு செய்து வைத்திருக்கிறேன். அதனால் நீ இப்போது நிர்வாணமாக வீடியோ கால் செய்யவில்லை என்றால் அதை உனது பெற்றோருக்கு அனுப்பி வைத்து விடுவேன் என மிரட்டி உள்ளார்.
இதனை நம்பாத மாணவி சிறுவனிடம் என்னிடம் பொய் சொல்லி ஏமாற்ற நினைக்காதே என எதார்த்தமாக பேசி உள்ளார். அதன்பின் சிறிது நேரத்தில் மாணவியின் செல்போனுக்கு அவர் நிர்வாணமாக பேசிய வீடியோ காட்சிகளை சிறுவன் அனுப்பி வைத்துள்ளார். அதைப் பார்த்து மாணவி அதிர்ச்சி அடைந்து தனது பெற்றோரிடம் அனைத்தையும் கூறி கதறி அழுதுள்ளார். இதனை தொடர்ந்து பெற்றோர் தனது மகளைக் கண்டித்ததுடன் கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் ஜெயாதேவி விசாரணை நடத்தியதில் மாணவி தன்னுடன் பழகிய சிறுவன் எந்த ஊரில் வசிக்கிறார் என கூட அறியாமல் அவருடன் மிக நெருக்கமாக பழகி வந்துள்ளார். எனவே அவர் எந்த ஊரில் வசிக்கிறார் என்பதை கண்டறிந்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்த சிறுவன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.