Categories
மாவட்ட செய்திகள்

“புதிதாக கட்டவுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்”…. அடிக்கல் நாட்டு விழா….!!!!!

கிளியனூர் ஊராட்சியில் புதிதாக ஆரம்ப நிலையம் கட்ட அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் அருகே உள்ள கிளியனூர் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்தின் கட்டிடம் சேதமடைந்ததால் சென்ற ஐந்து வருடங்களுக்கு முன்பாக இடிக்கப்பட்ட நிலையில் தற்போது 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டவுள்ளனர்.

இந்த நிலையில் அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கிளியனூர் ஊராட்சி மன்ற தலைவர் முகமது ஹாலிது தலைமை தாங்க வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அமிர்த குமார், ஒன்றிய குழு உறுப்பினர் சுகந்தவல்லி ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அபுல்ஹசன் முன்னிலை வகிக்க பலர் கலந்து கொண்டார்கள்.

Categories

Tech |