Categories
மாவட்ட செய்திகள்

“விபத்தில் அரசு பேருந்து கண்டக்டர் பலி”…. விபத்து ஏற்படுத்திய பேருந்து டிரைவர் கைது….!!!!!

அரசு பேருந்து கண்டக்டர் பஸ் மோதியதில் உயிரிழந்த நிலையில் போலீசார் விபத்து ஏற்படுத்திய பேருந்து டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சேமங்கலம் கிராமத்தை சேர்ந்த மணிவண்ணன் என்பவர் அரசு போக்குவரத்து கழகத்தில் பேருந்து கண்டக்டராக பணியாற்றி வந்த நிலையில் நேற்று மதியம் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் மணிவண்ணன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். இதை அடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் மணிவண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். மேலும் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து பேருந்து டிரைவர் குருசாமி என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |