தான் தயாரிக்கும் திரைப்படத்தில் நடிக்கும் உதயநிதி ஸ்டாலினை வாழ்த்தி இணையத்தில் பதிவிட்டுள்ளார் கமல்ஹாசன்.
தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்பொழுது மகிழ் திருமேனி இயக்கத்தில் கலகத் தலைவன் திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடிக்க ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக கமல் படத்தை தயாரிக்கின்றார்.
இதற்கான அறிவிப்பு சில தினங்கள் முன்பு வெளியான நிலையில் உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்து தனது இணையதள பக்கத்தில் நன்றி தெரிவித்திருந்தார். அவர் கூறியிருந்ததாவது, ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தின் கதை நாயகனாகவும் பெருமைமிகு வாய்ப்பை எனக்கு வழங்கி, அதற்கான அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன் சாருக்கு நன்றி என கூறியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக கமல் கூறியுள்ளதாவது, அன்றைய சரித்திரம், மீண்டும் அதை நினைவுபடுத்துவோம். தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன் என கூறியுள்ளார்.