Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(ஜூலை 28)….. மின்தடை செய்யப்படும் பகுதிகள்….. இதோ மொத்த லிஸ்ட்…..!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (ஜூலை 28) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கும்மிடிப்பூண்டி சிப்காட் துணை மின் நிலையம் 110/33 – 11kv அலகு – 4ல் இன்று  மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொழிற்சாலைகளுக்கு மட்டும் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. மற்ற 11kv ACCL மற்றும் 11kv எளாவூர் மின் பாதைகளில் மின் விநியோகம் நிறுத்தப்படாது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள தேவனூர் புதூர் துணை மின் நிலையம் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (28-7-22 )பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கரட்டூர் , ராவணபுரம், கரட்டுமடம் , அனுமந்தப்பட்டணம், பாண்டியன் கரடு, ஆண்டியூர் , பருத்தியூர், ரெட்டியாருர் , அம்மிசி கவுண்டனூர், தீபாலப்பட்டி , அர்த்தனாரி பாளையம் , எரிசின்னம்பட்டி, தேவனூர் புதூர், வல்லகுண்டபுரம், ஜிலேபி நாயக்கன் பாளையம், சாலையூர், ரெட்டிபட்டி, சர்கார் புதூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட திருச்செந்தூர், ஆறுமுகநேரி, சாத்தான்குளம், நாசரேத், உடன்குடி பகுதிகளில் சீரான மின்விநியோகம் வழங்கும் பொருட்டு முன்னேற்பாடாக சேதமடைந்த மின்கம்பங்கள், மின்பாதைகளில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மரக்கிளைகளை அகற்றுதல், சேதமடைந்துள்ள இழுவை கம்பிகளை சீரமைத்தல் போன்ற பணிகள் இன்று (வியாழக்கிழமை) மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால் வீரபாண்டியன்பட்டினம், அன்னை தெரெசாநகர், பாத்திமாநகர், சங்கிவிளை, குருநாதபுரம், மருத்துவர் தெரு, காட்டுதைக்கா தெரு, முத்தாரம்மன் கோவில் தெரு, சொக்கப்பளங்கரை, வாலசுப்பிரமணியபுரம், மேலசாத்தான்குளம், மீன்கடைத் தெரு, நாசரேத் ரோடு, காமராஜ் நகர், கொம்பன்குளம், மீரான்குளம், ஆசிர்வாதபுரம், பிள்ளையான்மனை, செம்பூர், ஆதிநாதபுரம், எழுவரைமுக்கி, தோப்பூர், ஏக்கர்காடு, குலசேகரன்பட்டினம், மணப்பாடு, உதிரமாடன்குடியிருப்பு, செம்புலிங்கபுரம், புத்தன்தருவை, அதிசயபுரம், ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |