Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND டாஸ் வென்று பௌலிங் தேர்வு …..!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுகின்றது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3  போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடிவருகிறது. முதல் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை எளிதாக சமாளித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது. இதனால் நியூசிலாந்து அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.இந்தநிலையில் இன்று காலை இரண்டாவது ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இந்திய அணியின் தொடக்க வீரர்களான தவான் – ரோஹித் காயம் காரணமாக வெளியேறியதால் இளம் வீரர் ப்ரித்வி ஷா – மயாங்க் இணை மீண்டும் களமிறங்கவுள்ளது. கடந்தப் போட்டியில் நல்ல தொடக்கம் கிடைத்தும் அதனை பெரிய ஸ்கோராக மாற்றாமல் இருவரும் வெளியேறினர். இந்தப் போட்டியில் நிச்சயம் அந்த தவறு நடக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய கேப்டன் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ஆகியோர் வழக்கம் போல் நல்ல ஃபார்மில் உள்ளதால் இந்திய அணியின் பேட்டிங்கில் எந்த பிரச்னையும் இல்லை.

Categories

Tech |