2014 முதல் 2022 ஆண்டு வரை 7. 22 லட்சம் பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு துறையில் கடந்த 8 வருடங்களில் பணி நியமனம் பெற்றவர்களின் எண்ணிக்கை தொடர்பான கேள்விக்கு மக்களவையில் மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் நேற்று எழுத்து மூலம் பதில் அளித்துள்ளார். அவர் பேசும்போது, கடந்த 2014 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் 22.05 கோடி விண்ணப்பத்தார்களிடமிருந்து அரசு பணிக்கான மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதில் 7,22,311 பேருக்கு பல்வேறு துறைகளில் பயணி நியமனத்திற்கான பரிந்துரைகளை ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் வழங்கியிருக்கின்றது.
அதன்படி அவர்களுக்கு பணி வழங்கப்பட்டிருக்கிறது என கூறியுள்ளார். மேலும் வேலைவாய்ப்பை உருவாக்குவதும், மேம்படுத்துவதும் அரசின் முன்னுரிமையாக இருப்பதாக கூறிய ஜுதேந்திர சிங் அதன்படி நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். அரசு செயல்படுத்தி வரும் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தால் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என மந்திரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.