Categories
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்: சென்னைக்கு வர ஆவலுடன் காத்திருக்கிறேன்….. பிரதமர் மோடி டுவீட்….!!!!

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவிற்காக சென்னைக்கு வர ஆவலுடன் காத்திருக்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். செஸ் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடந்தாலும் தொடக்க விழா, பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கண்கவர் நடனங்களுடன் இன்று மாலை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கிறது.

இந்நிலையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவிற்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் அவர்,’ 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவிற்காக சென்னைக்கு வர ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தியாவிலேயே, அதுவும் செஸ்ஸுடன் பெருமைமிகு தொடர்பைக் கொண்டுள்ள தமிழ்நாட்டிலேயே இது ஒரு சிறப்பான போட்டியாகும்.’ என கூறியுள்ளார்.

Categories

Tech |