Categories
மாநில செய்திகள்

கார் விபத்து….. திமுக MLA மருத்துவமனையில் அனுமதி….!!!!

இன்று மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர், அமைச்சர்கள் உட்பட பலரும் இதில் கலந்து கொள்கிறார்கள். இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க வரும்வழியில், திமுக எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலத்தின் கார் விபத்தில் சிக்கியது. ஈரோடு மாவட்டம் பவானி அருகே வாய்க்கால்பாளையம் வளைவில் வேகமாக வந்தபோது கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.  இதில் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலத்திற்கு கை முறிவு, கார் ஓட்டுநருக்கு பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |