Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று இந்த பகுதிகள் மூடல்…. பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!!

உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி முதல்முறையாக இந்தியாவில், அதிலும் தமிழகத்தில் இன்று நடைபெறவுள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று தொடங்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி. முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் இணைந்து தொடங்கி வைக்கவுள்ளனர். இதற்காக சென்னையிலிருந்து மாமல்லபுரம் வரையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் சென்னை முழவதும் திருவிழாபோல் ஜொலிக்கிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்நிலையில்செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க நாளை முன்னிட்டு, வண்டலூா் உயிரியல் பூங்காவும், கிண்டி சிறுவர் பூங்காவும் இன்று வியாழக்கிழமை மூடப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதற்குப் பதிலாக ஆகஸ்ட் 2ம் தேதி பூங்காக்கள் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |